search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யஷ்வந்த் சின்கா"

    • திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.
    • யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐதாராபாத்:

    ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    யஷ்வந்த் சின்காவுக்கு சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும். தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.

    நாளை யஷ்வந்த்சின்கா வேட்பு மனுதாக்கல் செய்கிறார் இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
    • பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை)18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் அதன் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததன் காரணமாக தானாகவே அந்த சமூகத்தின் பாதுகாவலராகி விட முடியாது.
    • இந்த முறை ஜனாதிபதி தேர்தல் என்பது அடையாள போட்டி அல்ல, இது சித்தாந்தத்துக்கான போட்டியாகும்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒடிசாவின் பழங்குடி இனத்தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில், வாஜ்பாய் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசில் நிதி, வெளியுறவு மந்திரி பதவி வகித்த யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் யஷ்வந்த் சின்கா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்த முறை ஜனாதிபதி தேர்தல் என்பது அடையாள போட்டி அல்ல, இது சித்தாந்தத்துக்கான போட்டி ஆகும். இது முர்முவா, சின்காவா என்பதற்கான அடையாளம் பற்றிய கேள்வி அல்ல. நான் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க களத்தில் நிற்கிறேன்.

    முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் என்ன செய்திருக்கிறார்? அவர் ஜார்கண்ட் கவர்னராக இருந்திருக்கிறார். அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததன் காரணமாக தானாகவே அந்த சமூகத்தின் பாதுகாவலராகி விட முடியாது.

    நான் நிதி மந்திரியாக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுகளை பாருங்கள். பழங்குடி சமூகத்தினருக்கு அதிகம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்காக, பெண்களுக்காக சிறப்பு ஒதுக்கீடுகள் செய்திருக்கிறேன். நான் பணியாற்றிய அரசின் கொள்கை அது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரதிய ஜனதா கட்சி தற்போது 2 பேரின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை மறைமுகமாக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா கடுமையாக விமர்சித்துள்ளார். #BJP #YashwantSinha
    சண்டிகர்:

    வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்கா. சமீபத்தில் அதிருப்தி காரணமாக அவர் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாடு தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் அடித்தட்டு மக்களை நாங்கள் சந்தித்து பேசுகையில் அவர்கள் மத்தியில் சோர்வான சூழல் காணப்படுவதை தெரிந்து கொண்டோம். தேர்தலின் போது அளிக்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மதிப்பீடாகத்தான் இருக்கும். நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் என்ன நடைபெற்றது என்பதாக அந்த தேர்தல் இருக்காது.

    வாஜ்பாய், அத்வானி காலத்தில் இருந்த பா.ஜனதா தற்போது இல்லை. அவர்கள் தலைமையில் பா.ஜனதாவில் பணிபுரிவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்தது இல்லை. ஆனால் கடந்த 4 ஆண்டு காலத்தில் பா.ஜனதாவில் உள்கட்சி ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்துவிட்டது.


    பா.ஜனதா கட்சி தற்போது 2 பேரின் கைப்பாவையாக மாறிவிட்டது. இதே 2 பேரின் கைப்பாவையாக மத்திய அரசும் மாறிவிட்டது. கடந்த 1993-ம் ஆண்டு பா.ஜனதாவில் நான் சேர்ந்த போது கட்சி இப்படி இல்லை. இது வாஜ்பாய், அத்வானி கட்சி அல்ல.
    இமாச்சல பிரதேசத்தில் கடந்த 1982-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு 29 இடங்கள் கிடைத்தன. பா.ஜனதாவுக்கு சுயேச்சைகள் 6 பேர் ஆதரவு அளித்தனர். ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கையே போதும். அந்த தேர்தலில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால் ஆட்சி அமைக்க நாம் உரிமை கோர வேண்டாம் என்று பா.ஜனதா மாநில தலைமையை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.

    ஆனால் கர்நாடகாவில் தற்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் வாஜ்பாய், அத்வானி காலத்தில் இருந்த பா.ஜனதா தற்போது இல்லை என்று கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    2 பேரின் கைப்பாவை என்று யஷ்வந்த் சின்கா கூறி மோடியையும், அமித்ஷாவையும் மறைமுகமாக தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #BJP #YashwantSinha #Modi #AmitShah
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று யஷ்வந்த் சின்கா குற்றம் சாட்டி உள்ளார். #Modi #YashwantSingh
    பனாஜி:

    வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய நிதி மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் யஷ்வந்த் சின்கா.

    பா.ஜனதாவில் தற்போது அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு மோடி தலைமையிலான மத்திய அரசை அவர் விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோவா மாநிலம் பனாஜியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யஷ்வந்த் சின்கா பேசியதாவது:-

    நாங்கள் கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினோம்.

    தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரி தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று வாக்குறுதியும் அளித்தோம். ஆனால் அதற்கு மாறாக தற்போது வரி தீவிரவாதம் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது உத்தரவுகள் வருகின்றன.



    பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்து கோர்ட்டுகளில் 20 லட்சம் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தபிறகு இதுவரை 357 திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

    நமது நாட்டின் வரி விதிப்பு முறையும், அதை பின்பற்ற சொல்வதும் நகைப்புக்குரியதாக உள்ளது.

    அதாவது மின்சாரம் இல்லாத கிராமத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் வருமான வரி கணக்கு இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் எப்படி அதை செய்ய முடியும்?

    1975-ம் ஆண்டில் இந்திரா காந்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசியல் ரீதியில் இந்த முடிவை இந்திராகாந்தி எடுத்தார்.

    ஆனால் தற்போது நாம் எதிர்கொண்டு வரும் நெருக்கடி நிலையானது அறிவிக்கப்படாத ஒன்றாகும். இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் நமது நாட்டின் அரசியல் முறையில் மெதுவாக கொல்லும் வி‌ஷம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #Modi #YashwantSingh
    ×